தூத்துக்குடி
கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியினர் தெருமுனை பிரசாரம்
|கோவில்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பசுவந்தனை ரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி எதிரில் விலைவசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், பொதுவிநியோக திட்டத்தில் அனைத்து உணவு பொருட்களையும் முறையாக வழங்க வேண்டும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடந்தது. இதில் மாவட்ட செயலர் ரவீந்திரன், ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒன்றிய குழு உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.