< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
சாலையை சீரமைக்க வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
|6 May 2023 12:45 AM IST
சாலையை சீரமைக்க வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் வடக்கு தெரு சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை உடனே சீரமைத்து செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில் வடக்கு தெருவில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரக் குழு உறுப்பினர் ஆபிரகாம் வின்சிலி தலைமை தாங்கினார். இதில் மார்த்தாண்டம் வட்டாரக் குழு செயலாளர் சர்தார்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.