< Back
மாநில செய்திகள்
மருதமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மருதமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
10 Jun 2022 6:46 PM IST

மருதாடு கிராமத்தில் மருதமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசி, ஜூன்.11-

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள மருதமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஹோமங்கள் செய்து பூர்ணாஹுதி நடந்தது.

அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் கலசத்தை கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதையடுத்து மூலவர் மருத மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் வந்தவாசியை சுற்றி உள்ள கீழ்கொடுங்காலூர், மருதாடு உள்ளிட்ட கிராம மக்கள், மக்கள் பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


மேலும் செய்திகள்