மார்த்தாண்டம்: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது - பொறி வைத்து பிடித்த போலீசார்
|மார்த்தாண்டம் அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்து க்குட்பட்ட காஞ்சிரகோடு, பெருதிம்புழி பறம்பு விளையைச் சேர்ந்தவர் மது (வயது 42). இவர் மீது அடிதடி புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மதுவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு 2020-ம் ஆண்டு மது ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இந்த நிலையில் மது திடீரென தலைமறைவானார்.
இதையடுத்து அவரை பிடிக்க குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் போலீசார் மதுவை தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் 2 ஆண்டுகளாக தேடப்பட்ட மது நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் இருப்பது தெரியாமல் மது அங்கு வர, போலீசார் அவரை கைது செய்தனர். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.