< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
14 வயது சிறுமிக்கு திருமணம்
|18 Jun 2022 11:08 PM IST
திண்டிவனம் அருகே 14 வயது சிறுமிக்கு திருமணம் தாய்-தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
திண்டிவனம்
திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஜானகிராமன் என்பவருக்கும், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக திண்டிவனம் சைல்டு லைன் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள் மேற்படி கிராமத்துக்கு சென்று நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறுமியின் தாய், தந்தை, திருமணம் செய்த நபர், அவருடைய தந்தை ஆகிய 4 பேர் மீதும் குழந்தை திருமண சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோசணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.