< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை; முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை; முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை

தினத்தந்தி
|
28 May 2022 1:40 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை முழுவதையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000, ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த பாதி தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 மற்றும் ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000 என வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகை தற்போது பயனாளிகளுக்கு முழு தொகையையும் ரொக்கமாக வழங்க அரசு ஆணையிடுகிறது."

இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்