< Back
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவவீரர் மர்மசாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவவீரர் மர்மசாவு

தினத்தந்தி
|
9 April 2023 12:15 AM IST

நாமக்கல்லில் முன்னாள் ராணுவவீரர் மர்மமாக இறந்து கிடந்தார்.

திருவண்ணாமலை போளூர்சாலை டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர் நாமக்கல்லில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். இங்குள்ள முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இவர் நாமக்கல் உதவி கலெக்டர் முகாம் அலுவலக சுற்றுச்சுவர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவரது மகன் தர்ஷன்குமார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவவீரர் முருகன் கால்தவறி கீழே விழுந்து இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. அவர் மதுபோதையில் இருந்தாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்