< Back
மாநில செய்திகள்
உடுமலை உழவர் சந்தையில் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம்
திருப்பூர்
மாநில செய்திகள்

உடுமலை உழவர் சந்தையில் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம்

தினத்தந்தி
|
5 Nov 2022 6:12 PM GMT

உடுமலை உழவர் சந்தையில் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

உடுமலை உழவர் சந்தையில் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

உழவர் சந்தை

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை துறையின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு காய்கறிகளை விற்பனை செய்வதற்கு 150 விவசாயிகள் அனுமதி பெற்று அடையாள அட்டை வைத்துள்ளனர்.

வாரநாட்களில் தினசரி 65 முதல் 70 விவசாயிகளும், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 80 முதல் 85 விவசாயிகளும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். உழவர் சந்தையில் இவர்களுக்கு 64 கடைகள் உள்ளன. இதுதவிர குடிலில் 10 கடைகளை வைக்கலாம். கூடுதலாக விவசாயிகள் வரும்போது திறந்த வெளியில் கடை வைக்கப்படுகிறது.

உழவர்சந்தை அலுவலகம்

உழவர்சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு காய்கறிகளை எடைபோடுவதற்கு மின்னணு தராசு வழங்கப்படுகிறது. இதற்காக 37 மின்னணு தராசுகள் மட்டுமே உள்ளது. மற்ற விவசாயிகளுக்கு எடைகற்கள் தராசு வழங்கப்படுகிறது. இன்னும் 50 மின்னணு தராசு தேவை என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அத்துடன் இந்த உழவர் சந்தையின் அலுவலகம் சிமெண்ட் சீட்டால் வேயப்பட்டுள்ளது. தராசுகள் மற்றும் ஆவணங்களை வைப்பது, அலுவலர்களுக்கான இடவசதி ஆகியவற்றிற்காக இந்த அலுவலகத்திற்கு புதியதாக கான்கிரீட் கட்டிடத்தால் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை வாங்குவதற்கு உழவர் சந்தைக்கு வாரநாட்களில் தினசரி பொதுமக்கள் 2,500 முதல் 3,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 3,500 பேர் வரையும் வருகின்றனர். இங்குள்ள கழிப்பிடமும் பழுதடைந்துள்ளது.

குண்டும், குழியுமான நடைபாதை

இங்குள்ள கழிப்பிடம் பழுதடைந்துள்ளது. உழவர் சந்தைக்குள் நடைபாதைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.அதனால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் நடைபாதைகளில் பேவர்பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உழவர் சந்தைக்கு முன்பு மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அந்த பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அதனால் உழவர் சந்தைக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. உழவர் சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று கோரி உழவர் சந்தை நிர்வாகம், உயர் அதிகாரிகளுக்கு கருந்துரு அனுப்பியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்