< Back
மாநில செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டிதர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:30 AM IST

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவார்கள். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறும். அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை ஜோராக நடைபெற்றது.

அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உழவு சந்தைக்கு வர தொடங்கினர். நேற்று இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்), நாட்டு காய்கறிகள் என மொத்தம் 44 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 55 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறி வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர். வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. இது மட்டுமின்றி 2 டன் பூக்களும் விற்பனையானது. கடந்த முதல் மற்றும் 2-வது சனிக்கிழமைகளில் 40 டன் காய்கறிகள் விற்பனையானது

அடுத்து 4-வது சனிக்கிழமையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்