< Back
மாநில செய்திகள்
விளாத்திகுளம் அருகே மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விளாத்திகுளம் அருகே மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

தினத்தந்தி
|
6 Aug 2023 12:15 AM IST

விளாத்திகுளம் அருகே மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அங்கு சென்று, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்