நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் முழுவதும்பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
|நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை 198 பள்ளிகளை சேர்ந்த 8,852 மாணவர்களும், 9,375 மாணவிகளும், மாற்றுபாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 18,228 பேர் எழுதினர். இதில் 8,509 மாணவர்களும் 9,160 மாணவிகளும், மாற்று பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 17,670 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு உயர்கல்வியில் சேர வசதியாக உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று அந்தந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன் மாணவர்களுக்கு அசல் சான்றிதழை வழங்கினார். இதேபோல் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பெரியண்ணன் மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்களை வழங்கினார்.