< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
9 Sep 2022 6:16 PM GMT

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிபாளையம் காலனியில் உள்ள மதுரை வீரன், விநாயகர், மாரியம்மன், கன்னிமார்சாமி, கருப்பண்ணசாமிகளின் கோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்த டைந்தனர். மாலை 6 மணிக்கு மேல் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகபூஜை, யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று விநாயகர் வழிபாடும், 2-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்