< Back
மாநில செய்திகள்
மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:00 AM IST

மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் எண்ணெய்கார தெருவில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன், சந்திரபகவான் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனிதநீரை கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அரியலூர் உழவர் சந்தை பின்புறம் அமைந்துள்ள விநாயகர், ஆனந்தாயி, ஆண்டத்தாயி, ஆகாசகருப்பு கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்