கள்ளக்குறிச்சி
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|தச்சூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாரியம்மன் பிறப்பு, மாரியம்மன் முத்து வரம் வாங்குதல், காத்தவராயன் வனம் செல்லுதல், 5-ம் நாள் உற்சவமான பால்குடம் எடுத்தல், 6-ம் நாள் உற்சவமான காத்தவராயன் ஆரியமாலாவுக்கு வளையல் போடுதல், 7-ம் நாள் உற்சவமான காத்தவராயன் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி காலை கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்று, தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அலங்கரித்து வைக்கப்பட்ட தோில் அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.