< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|18 July 2022 1:47 AM IST
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் காட்டுநாயக்கன் மகாமாரியம்மன், கெங்கையம்மன், தளிஞ்சிக்காடு கொண்டையம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் மற்றும் காப்பு கட்டு நிகழ்ச்சியும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதையடுத்து திருத்தேர் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் தேர் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அரங்கூர் காட்டு நாயக்கர்களின் சமூகத்தினர் செய்திருந்தனர்.