< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் இரட்டை தேரோட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் இரட்டை தேரோட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 8:23 PM GMT

மாரியம்மன் கோவில் இரட்டை தேரோட்டம் நடந்தது.

துறையூர்:

துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி குடி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாளன்று பூங்கரகம் புறப்பாடும், மறுநாள் அன்னபட்சி வாகனத்தில் நாக சர்ப்ப புறப்பாடும் நடைபெற்றது. 6-ந் தேதி யாளி புறப்பாடும், நாகசர்ப்ப புறப்பாடும் நடைபெற்றது. 7-ந் தேதி பூதகணங்கள், நாகசர்ப்ப புறப்பாடும், 8-ந் தேதி யானை வாகனமும், யாளி புறப்பாடும், 9-ந் தேதி பூந்தேர் புறப்பாடும் நடைபெற்றது. 10-ந் தேதியன்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜையும், மறுநாள் குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் தேர் ஏற்றம் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று துறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேறு எங்கும் இல்லாத வகையில் இரட்டை தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6 மணிக்கு மேல் தேர் நிலையை வந்தடைந்தது.

இதில் துறையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து திருவிழாவில் முத்து பல்லக்கு புறப்பாடும், மஞ்சள் நீர் மற்றும் குடி விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்