< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் கொடை விழா
|19 Aug 2023 12:15 AM IST
சிவகிரி மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
சிவகிரி:
சிவகிரி தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள தேவி நாக மாரியம்மன் கோவில் கொடை விழா 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் கும்மி பாட்டு, பால்குடம் ஊர்வலம், ஆயிரம் கண் பானை, அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், கும்மியாட்டம், கோலாட்டம், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம், சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.