< Back
மாநில செய்திகள்
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
அரியலூர்
மாநில செய்திகள்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

தினத்தந்தி
|
13 Aug 2023 1:30 AM IST

செங்குந்தபுரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 10-ந் தேதி இரவு அம்மன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் செடல் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். விழாவைெயாட்டி பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக ெசன்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தபுரம் உறவுமுறை பஞ்சாயத்தினர், ஊர் நாட்டாண்மைகள், விழா கமிட்டியினர், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்