< Back
மாநில செய்திகள்
மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

தினத்தந்தி
|
26 Jun 2023 1:48 AM IST

வள்ளியூர் மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

வள்ளியூர்:

வள்ளியூர் மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா, வழிகாட்டுதல் மற்றும் புத்தொளி பயிற்சி முகாம் என முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி தாளாளர் செயலாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். டி.டி.என். கல்விக்குழும பேபி ஒலிவா முன்னிலை வகித்தார். வள்ளியூர் பங்குத்தந்தை ஜான்சன் அடிகளார் வாழ்த்தி பேசினார். டி.டி.என். கல்விக்குழும பொருளாளர் ஸ்டான்லி வரவேற்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை பேராசிரியரும், கல்லூரி வளர்ச்சி துறை புல முதல்வருமான ராஜலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை மாணவிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் புத்தொளி பயிற்சி வழிகாட்டுதல் குறித்து பேசினார்.

முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவிகள் பூங்கொத்து, இனிப்பு, கல்லூரியின் பெயர் பொறித்த பேனா வழங்கி வரவேற்றனர். விழாவில் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மற்றும் பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்