காஞ்சிபுரம்
மார்கழி இசை விழா கலைஞர்களுக்கு விருது
|காஞ்சீபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மார்கழி இசை விழா கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் வழங்கினார்.
காஞ்சீபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் பல்வேறு கலைஞர்களின் இசை நாட்டியம், குரலோசை, சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலை இளமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.4 ஆயிரத்திற்கான காசோலையும், கேடயமும், கலை வளர்மணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.6 ஆயிரத்திற்கான காசோலையும் கேடயமும், கலைச்சுடர்மணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் கேடயமும், கலை நன்மணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும் கேடயமும், கலை முதுமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும், கேடயமும் மாவட்ட அளவிலான குரலிசை, நடனம், ஓவியம், இசை கருவிகள் வாசித்தல் போன்ற பிரிவுகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பாராட்டு சான்றிதழ் கேடயங்களை வழங்கினார்கள். கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.