விழுப்புரம்
மாரத்தான் ஓட்டம்
|விக்கிரவாண்டியில் மாரத்தான் ஓட்டம் கவுதம சிகாமணி எம்.பி. தொடங்கி வைத்தார்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நகர தி.மு.க. மற்றும் உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கவுதமசிகாமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாணவ, மாணவிகள், சிறுவர்கள் கலந்துகொண்டு ஓடினர். விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் சூர்யா கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. பின்னர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு மற்றும் கல்வி ஆலோசகர் மோகனசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் பாபுஜீவானந்தம், இளந்திரையன், முரளி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பிரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, கண்காணிப்புக்குழு எத்திராசன், மாவட்ட வாலிபால் கழக செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.