< Back
மாநில செய்திகள்
இரவு நேரத்தில் மாரத்தான் போட்டி... கூட்டத்தில் மாயமான சிறுவன் - கடும் அதிருப்தியில் மக்கள்
மாநில செய்திகள்

இரவு நேரத்தில் மாரத்தான் போட்டி... கூட்டத்தில் மாயமான சிறுவன் - கடும் அதிருப்தியில் மக்கள்

தினத்தந்தி
|
19 Feb 2024 3:52 AM IST

சேலத்தில் இரவு நேரத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியால் ஏராளமானோர் அதிருப்தி அடைந்தனர்.

சேலம்,

சேலம் காந்தி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு நேரம் என்பதால், பல்வேறு பகுதிகளில் போட்டியாளர்கள் இருட்டில் ஓடவேண்டி இருந்தது. மேலும் வாகனங்களும் அதே பாதையில் சென்றதால், விபத்து நேரும் அபாயமும் இருந்தது.

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற 9 வயது சிறுவன், கூட்டத்தில் மாயமானார். பின்னர், 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டார். காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், இந்த போட்டிக்கு அனுமதி அளித்துள்ளனர் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்