< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி

தினத்தந்தி
|
13 Oct 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்ணா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 முதல் 25 வயதிற்குட்ட 8 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் 152 பேரும், 5 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் 128 பேரும், 25 வயதுக்கு மேற்பட்ட 10 கி.மீட்டர் ஆண்கள் பிரிவில் 98 பேரும், 5 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் 65 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி கங்கலேரி வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்ட அரங்கை வந்தடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்கு முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000-க்கான பரிசுத்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார், தாசில்தார் விஜயகுமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலக பயிற்றுநர்கள், அலுவலக பணியாளர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்