< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
வலங்கைமானில் மாரத்தான் போட்டி
|9 Oct 2023 12:33 AM IST
தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவையொட்டி வலங்கைமானில் மாரத்தான் போட்டியை தாசில்தார் தொடங்கி வைத்தார்.
வலங்கைமான்:
வலங்கைமானில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது. வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் முன்புறம் இருந்து மாரத்தான் போட்டியை தாசில்தார் ரஷ்யா பேகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டம் கும்பகோணம் ரோடு, கடை தெரு, வடக்கு அக்ரஹாரம் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்தன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் செல்வம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.