< Back
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்
மாநில செய்திகள்

மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்

தினத்தந்தி
|
5 July 2023 11:07 AM IST

மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

சென்னிமலையில் வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மது பாட்டில்கள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மிக எளிதாக கலப்படம், மறு பயன்பாட்டின் போது சுத்தம் செய்வதில் குறைபாடு, சாலையோரம் மற்றும் விளை நிலத்தில் வீசி செல்வதால் விவசாயிகள் பாதிப்பு, எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்து விடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

இவற்றை தீர்க்க புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பேக் முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் 99 சதவீதம் சேதாரம் இருக்காது. 2 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து மறுக்கப்படவில்லை. அது குறித்து பரிசீலிக்கப்படும். தனியாக குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்