< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

தினத்தந்தி
|
14 Sept 2023 1:51 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

மதுராந்தகம் ஆர்.டி.ஓ. தியாகராஜன் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சிறப்பு விளக்க உரையாற்றினார்கள். இதில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அழகுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அந்தந்த துறை சம்பந்தப்பட்ட கண்காட்சிகளை அங்கு அமைத்திருந்தனர். முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 பயனாளிகளுக்கு ரூ.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நெட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதுராந்தகம் தாசில்தார் ராஜேஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்