< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
|9 May 2023 2:43 PM IST
பாலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் 25-ந் தேதி நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மே மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு வட்டத்தில் பாலூர் கிராமத்தில் எதிர்வரும் 25.05.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தன.