< Back
மாநில செய்திகள்
பிரதமரிடம் சிறந்த பெண் விவசாயி விருது பெற்றவரின் மகன் மனு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பிரதமரிடம் சிறந்த பெண் விவசாயி விருது பெற்றவரின் மகன் மனு

தினத்தந்தி
|
6 Dec 2022 12:52 AM IST

பிரதமரிடம் சிறந்த பெண் விவசாயி விருது பெற்றவரின் மகன் கோரிக்கை மனு அளித்தார்.

வேப்பந்தட்டை தாலுகா, இனாம் அகரத்தை சேர்ந்த அறிவழகன் தனது தாயுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது தந்தை இறந்து விட்டார். நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தாய் பூங்கோதையுடன் விவசாயம் செய்து வந்தேன். மேலும் எனது தாய் கடந்த 2014-15-ம் ஆண்டுக்கான இந்தியாவில் சிறந்த விவசாயிக்கான விருதினை பிரதமரிடம் பெற்றுள்ளார். தற்போது எனது தாயாருக்கு ஆரம்ப நிலையில் புற்றுநோய் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளாக, அவர் விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நான் 2017-18-ம் ஆண்டு முதல் இனாம் அகரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி எனது குடும்பத்தையும், எனது தாயாரின் மருத்துவ செலவையும் கவனித்து வந்தேன். எவ்வித முன் அறிவிப்புமின்றி கடந்த மாதம் முதல் என்னை தூய்மை காவலர் பணியில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் எனது குடும்பம் வறுமையின் பிடியில் உள்ளது. சற்று மாற்றுத்திறனாளியான நான் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன். இதனால் பாரத பிரதமரிடம் எனது தாய் பெற்ற இந்தியாவின் சிறந்த விவசாயி விருதினை கொடுத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளோம். எனவே எனக்கு நிரந்தர வேலை வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்