< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மாண்டஸ்' புயல்: மாமல்லபுரத்தில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை..!
|9 Dec 2022 8:22 AM IST
மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'மாண்டஸ்' புயல், இன்று இரவு முதல் நாளை வரை கரையை கடக்கவுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மிதவை படகு, மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.