< Back
மாநில செய்திகள்
மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

"மாண்டஸ்" புயல் பாதிப்புகள் குறித்து வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
9 Dec 2022 12:57 AM IST

"மாண்டஸ்" புயல் பாதிப்புகள் குறித்து வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் "மாண்டஸ்" புயல் பாதிப்புகள் குறித்து வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீடு, அலுவலகங்களில் மின்கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கிய ஆவணங்களை எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் பாதுகாப்பான உறையில் வைத்து கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் மின்தடை ஏற்படும் நேரத்தில் டார்ச்லைட் அல்லது மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டியினை எளிதில் எடுக்கும் வகையில் தயாராக வைத்திருத்தல் வேண்டும். கொதிக்க வைத்து ஆற வைத்த வெந்நீரை குடிக்க வேண்டும். நீர் நிலைகளுக்கு சென்று குளிப்பது, செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது. இரும்பு பாலங்கள், செல்போன் டவர்களுக்கு அருகிலோ நிற்க கூடாது. பழுதடைந்த கட்டிடங்களுக்குள் இருக்க கூடாது. மின்கம்பிகளின் அருகே செல்ல கூடாது. பழுதடைந்த மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது. கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். இடி, மின்னலின் போது செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்டங்களில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 18004254556, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் புயல் பாதிப்புகள் குறித்து தகவல், புகார்களுக்கு 9384056223 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்