< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
மன்னார்குடி பிருந்தாவன் நகர் குளத்தை தூர்வார வேண்டும்
|6 July 2023 12:15 AM IST
மன்னார்குடி பிருந்தாவன் நகர் குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மன்னார்குடி 3-வது வார்டு பிருந்தாவன் நகர் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் டோபி கானா குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குளமானது சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் செடிகளும், புதரும் மண்டி தூர்ந்து போய் சுற்றிலும் மண் சரிந்து புதர்களாக காட்சியளிக்கிறது. சலவை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த படிக்கட்டும் இடிந்து, சரிந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த குளத்தில் செடி- கொடிகள் மண்டியிருப்பதால் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வாரி சேதமடைந்த கரைகள் கட்டி தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.