< Back
மாநில செய்திகள்
கொரடாச்சேரியில் முதல் முறையாக நின்று சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்
திருவாரூர்
மாநில செய்திகள்

கொரடாச்சேரியில் முதல் முறையாக நின்று சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்

தினத்தந்தி
|
18 Sept 2023 12:45 AM IST

கொரடாச்சேரியில் முதல் முறையாக நின்று சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொரடாச்சேரியில் முதல் முறையாக நின்று சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மன்னார்குடியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, நீடாமங்கலம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்றடைகிறது.

திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் உற்சாகம்

இந்த நிலையில் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கொரடாச்சேரியில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மன்னை எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு 11.04 மணி அளவில் கொரடாச்சேரி நிலையத்துக்கு வந்து நின்றது.

மன்னார்குடி எக்ஸ்பிரஸ் முதல் முறையாக கொரடாச்சேரி ரெயில் நிலையத்தில் நின்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இனிப்பு வழங்கினர்

இதற்கான நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன், தி.மு.க. பேரூர் செயலாளர் கலைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு ரெயிலை வரவேற்றனர்.

முன்னதாக கொரடாச்சேரி வந்த ரெயிலுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, என்ஜின் டிரைவருக்கு சால்ைவ அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல கொரடாச்சேரியில் இருந்து சென்னைக்கு பயணித்த பயணிகளுக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்