< Back
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
திருவாரூர்
மாநில செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
11 Aug 2023 12:15 AM IST

திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாட்டில் தருமர் கோவில் உள்ளது. இங்குள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 23-ந்தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா நேற்று கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. நேற்றுமுன்தினம் விடையாற்றி மண்டகப்படியையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்