சிவகங்கை
மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்
|மஞ்சுவிரட்டில் காளைகள் சீறி பாய்ந்தன.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே புதுப்பட்டி முத்தான்பட்டி கிராமம் பெரிய பனையூர் அய்யனார் முத்தான் கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. புதுப்பட்டி வயல் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு கிராமத்தின் சார்பில் ஜவுளி எடுத்துவரப்பட்டு தொழுவத்தில் அடைத்து வைக்கப்பட்ட கோவில் காளைக்கு முதலில் கட்டி முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவை சீறி பாய்ந்து சென்றன. சிங்கம்புணரி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வந்து அவிழ்த்து விடப்பட்டன.
இதில் சில மாடுகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. பல மாடுகள் பிடிபடாமல் சென்றது. விழா ஏற்பாடுகளை புதுப்பட்டி முத்தான் பட்டி கிராமம் முத்தான் கருப்பர்சாமி கோவில் கிராமத்தார்கள் செய்து இருந்தனர்.