< Back
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
14 Aug 2022 10:27 PM IST

கடலாடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாயல்குடி,

கடலாடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

கடலாடி அருகே மேலச் செல்வனூர் ஊராட்சி ஆலங்குளம் கிராமத்தில் அலியார் சாகிப் தர்கா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப் பட்டது. காளையை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.

10 பேர் படுகாயம்

இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக் கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்