< Back
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
26 Jun 2022 10:05 PM IST

வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் அருகே மேல மாகாணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 பேர் வீதம் 14 குழுக்களாக மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில் 20 நிமிடம் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சில மாடுகள் பிடிபடாமல் சில மாடுகள் பிடிபட்டன. வெற்றி பெற்ற காளையர் குழுக்களுக்கும் காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. போட்டியில் மாடு முட்டியதில் திருச்சி, மருங்காபுரி தாலுகா பழையபாளையத்தை சேர்ந்த வரதராஜன் மகன் அழகர்சாமி என்ற குச்சி (வயது36) படுகாயம் அடைந்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது சடலம் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்