< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
|22 May 2022 10:20 PM IST
மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முக்கம்பட்டியில் சிவன் நாயகி அம்மன் கோவில் மாசி களரி திருவிழா நடந்தது. இதையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மேலூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்துகொண்டன. காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த ஜல்லிகட்டு காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக் கினர். ஏற்பாடுகளை முக்கம்பட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மருத்துவ குழுவினர், வருவாய்த் துறையினர் காவல்துறையினர் கலந்துகொண்டு மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.