< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு; 10 பேர் காயம்
|8 July 2022 11:29 PM IST
மஞ்சுவிரட்டு போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர்.
மானாமதுைர,
மானாமதுரை அருகே விளாக்குளத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்றன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 117-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும், போட்டியின் போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.