< Back
மாநில செய்திகள்
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்
கரூர்
மாநில செய்திகள்

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
26 April 2023 12:41 AM IST

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது. ஊர்வலத்தை கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வரை சென்றது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாலித்தீன் கவர்களை ஒழிப்போம், நிலத்தை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், நிலத்தடி நீரை காப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், இன்று பிளாஸ்டிக் எப்போதும் மாசு, கடைக்குச்செல்லும் பொழுது கைப்பை எடுத்துச் செல்வோம், பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்