< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது

தினத்தந்தி
|
31 Dec 2022 10:27 PM IST

பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக சட்டசபை கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுப்புறங்கள் மற்றும் தங்களுடைய வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விருது வழங்கப்படும்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள்துணிப்பை) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும் 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் https://tirupathur.nic.in என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.

இந்த விண்ணப்பப்படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை கலெக்டரிடம் வருகிற மே மாதம் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்