< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மணிப்பூர் விவகாரம்: மதுரையில் மாணவர்கள் அமைதிப்பேரணி
|3 Aug 2023 10:51 PM IST
மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.
மதுரை,
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். அமெரிக்கன் கல்லூரி மாணவ - மாணவியர்கள் தல்லாகுளத்தில் தொடங்கி, ஆட்சியர் அலுவலகம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பேரணி சென்றனர்.
மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.