< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவாரூர் வாஞ்சிநாதசுவாமி கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம்
|5 Nov 2022 4:03 PM IST
ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோவிலில் மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு கவர்னருமான இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார். இல.கணேசனுடன் சகோதரர் கோபாலன் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இல.கணேசனுக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். அங்குள்ள புத்த கங்கை குளத்திற்குச் சென்ற அவர், அங்கு புனித நீர் தெளித்துக் கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்மையில் இல.கணேசன் சகோதரரின் 80-வது பிறந்தநாள்(சதாபிஷேக விழா), சென்னையில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.