< Back
மாநில செய்திகள்
தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மனைப்பட்டா வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மனைப்பட்டா வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
16 Feb 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மனைப்பட்டா வழங்க வேண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா இல்லாத ஆதி திராவிடர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்துக்காக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுமார் 166 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், செங்கனாங்கொல்லை கிராமத்தில் சொந்த மனை இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இறந்து போனவர், வெளியூரில் உள்ளவர் ஆகியோர் பெயரிலும், நிலம் மற்றும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் பெயரிலும், ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பெயரிலும் வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் அதிகாரிகள் பட்டியல் தயாரித்துள்ளனர். பயனாளிகள் பட்டியலில் உள்ள 166 பேர்களில் 26 பேருக்கு மட்டுமே சொந்தமாக வீடு மற்றும் வீட்டு மனை இல்லை. இவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா கொடுக்கலாம். விவசாய நிலத்தை கையகப்படுத்தி வீட்டுமனைப்பட்டா கொடுப்பதை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்