தர்மபுரி
காரிமங்கலம் பகுதியில்செயற்கை முறையில் பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழம் பறிமுதல்
|காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கெரகோட அள்ளி மற்றும் காரிமங்கலம் பைபாஸ், அகரம் பிரிவு சாலை போன்ற பகுதிகளில் அதிகளவில் மாம்பழம் விற்பனை செய்யும் சாலையோர கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமையில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, அகரம் பிரிவு சாலை உள்ளிட்ட 4 மாம்பழ கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 400 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்ததுடன், தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை காரிமங்கலம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டது