கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி பகுதியில்மா சாகுபடி அதிகரிப்புவிவசாயிகள் மகிழ்ச்சி
|வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி பகுதியில் மா சாகுபடி அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மா சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி பகுதிகளில் பெங்களூரா, செந்தூரா, பீத்தார், மல்கோவா போன்ற மாங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு வகையான மாங்காய்கள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வேப்பனப்பள்ளி பகுதிகளில் பெங்களூரா, செந்தூரா, பீத்தார், மல்கோவா போன்ற மாங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் கடந்த ஆண்டு மா விளைச்சல் விலை நன்றாக இருந்த நிலையில் தற்போது இந்தாண்டும் சாகுபடி அதிகரித்து அதிகரித்துள்ளது. தற்போது அனைத்து மாமரங்களில் மாங்காய்கள் காய்ந்து பறிப்பதற்கு தயாராக உள்ளது. இந்த மாங்காய்கள் தற்போது சாகுபடி செய்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் குறைந்த அளவிலே மகசூல் காணப்பட்டாலும் விலை நன்றாக இருக்கும் என இப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.