< Back
மாநில செய்திகள்
மாங்காடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாங்காடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்

தினத்தந்தி
|
1 May 2023 1:11 AM IST

வடகாடு அருகேயுள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.

மாங்காடு முத்துமாரியம்மன் கோவில்

வடகாடு அருகே பிரசித்தி பெற்ற மாங்காடு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா நேற்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தேரோட்ட திருவிழா தொடங்குவதாக இருந்தது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில், மாங்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களுக்கு கோவிலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவிழா நிறுத்தம்

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகளுடன் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து திருவிழா நடத்துமாறு அறிவுறுத்தினார். எனினும், ஒருமித்த கருத்து ஏற்படாததால் திருவிழாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தாசில்தார் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்