மாண்டஸ் புயல் எதிரொலி - வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடல்...!
|மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நிறைய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீர்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.