மாண்டஸ் புயல் எதிரொலி: பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
|பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,
காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு, நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும். இதனால் மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று இரவு (9-12-2022) மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையல் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் (செல்பி) எடுப்பதைத்த தவிர்க்க வேண்டும்.
புயல் மற்றம் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளின் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.