< Back
மாநில செய்திகள்
மாண்டஸ் புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
8 Dec 2022 3:04 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது.

இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.9) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்