மாண்டஸ் புயல்: ஆம்னி பஸ்கள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு
|ஆம்னி பஸ்கள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் புயல் வீசும் நாளில் (இன்று) இரவு பஸ் சேவை அளிக்க கூடாது என்றும் பஸ் நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் இன்று இரவு வழக்கம் போல இயங்கும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.